தபால் நிலையம் அருகில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

65பார்த்தது
வாணியம்பாடி தலைமை தபால் நிலையம் முன்பு வாணியம்பாடி பார் அசோசியேஷன் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டம்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தலைமை தபால் நிலையம் முன்பு வாணியம்பாடி பார் அசோசியேஷன் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களான குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றை சமஸ்கிருத மொழியிலும், இந்தி மொழியிலும், மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வாணியம்பாடி பார் அசோசியேஷன் தலைவர் வழக்கறிஞர் ஏ. சி. தேவகுமார் தலைமை வகித்தார்.
இதில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி