திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சிஎன்ஏ சாலையில் புதியதாக ஹைதராபாத் பிரியாணி கடை ஒன்று இன்று(செப்.12) திறக்கப்பட்டது. இந்த கடையில் இன்று ஒருநாள் மட்டும் பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று விளம்பரம் அறிவிகிக்கப்ட்டிருந்தது. மேலும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த கடையை காங்கிரஸ் பிரமுகர் சையத் புறான் என்பவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திறந்து வைத்த அடுத்த நொடியே பிரியாணி வாங்க கூட்டம் அலைமோதியது