திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையிலான, வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி, பாமக நிர்வாகிகள் குடியாத்தம் பகுதியை சேர்ந்த திமுக பேச்சாளர் குமரன் என்பவர் மை சென்னை 360 என்ற youtube சேனலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை அவதூறாக பேசியுள்ளதாகவும் இதனால் திமுக பேச்சாளர் குமரன் என்பவரை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் மாநிலத் தலைவரின் மீது பொய்யான அவதூறு பரப்பி இணையத்தில் பதிவிட்டு இருக்கும் பதிவினை உடனடியாக நீக்கும்படியும் மேலும் அவருடைய மை சென்னை 360 youtube சேனலை முடக்க வேண்டும் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.