இது ஒன்றும் அடிமை அரசு அல்ல என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நடைபெறும் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய உதயநிதி, "இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் வேண்டுமானால், நீங்கள் நீட்டும் இடத்தில் கையெழுத்து போடுவார்கள். நிதி வேண்டுமென்றால், எந்த இடத்திலும் கையெழுத்து போடுவார்கள். இது ஒன்றும் அடிமை அரசு அல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் மகத்தான தலைவரால் வழிநடத்தப்படும் சுயமரியாதை உள்ள திராவிட மாடல் அரசு" என்று தெரிவித்துள்ளார்.