டெல்லி பாஜக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்ற முடிவை நிதிஷ்குமார் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தில் நடந்து வரும் யாத்திரையை இதற்கான காரணமாக சொல்லி இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் சமீப வாரங்களாவே பீகார் முதல்வர் நிதீஷ் குமார் முரண்டு பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.