*திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். *
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக செயல்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் துவங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு வாகனத்தின் மூலம் தமிழக அரசின் புதுமை பெண் திட்டம் தமிழ் புதல்வன் திட்டம் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் உயர்கல்வி நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வாகனத்தில் ஒலிபெருக்கி மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் விளம்பர பலகைகள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கும் அடுத்த மாதம் 10 நாட்களுக்கும் என மொத்தம் 20 நாட்கள் தொடர்ந்து மாவட்டம் முழுதும் உள்ள மக்கள் கூடும் மையங்களிலும் இடங்களிலும் கிராமப்புறங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளன.