*திருப்பத்தூரில் தமிழ்நாடு ஊழியர்கள் சங்கத்தினர் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமையை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம். *
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் அருள் மொழிவர்மன் தலைமையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றச்சாட்டுக்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கொல்கத்தா முதுநிலைப் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.