சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் ரோப் கார் சேவை தொடக்கம்!

77பார்த்தது
சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் ரோப் கார் சேவை தொடக்கம்!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை செப். 7ஆம் தேதி முதல் தொடங்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் 1305 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. இந்நிலையில் ரோப்கார் பராமரிப்பு பணிகளுக்காக ஆக. 22ஆம் தேதி ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. மீண்டும் இச்சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி