தஞ்சாவூர்: 45 வயது திருமணமான பெண் ஒருவர் கடந்த 3ஆம் தேதி இரவு பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அவ்வழியாக சென்ற பிரவீன் (32), ராஜ்கபூர் (25) இருவரும் தனித்தனி டூவீலர்களில் வந்துள்ளனர். பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் லிஃப்ட் கொடுப்பதாக கூறி ஒரு பைக்கில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர். அப்போது, பிரவீன், ராஜ்கபூர் இருவரும் சேர்ந்து ஆளில்லாத வயல்வெளிக்கு அப்பெண்ணை இழுத்துச் சென்றுஅவரை தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.