ஆசிரியர் தினத்தையொட்டி சென்னை தாம்பரம் அடுத்த மேவாக்கத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து மரக்கன்றுகளை மாணவர்கள் பரிசாக கொடுத்தனர். ஆசிரியர் தினத்தில் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் பிற்போக்கான செயல்களில் ஒன்று ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்வது என கண்டன குரல்கள் எழுந்துள்ளன. இது சனாதனத்தை மாணவர்களிடையே திணிப்பதாகும் எனக்கூறி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியுள்ளனர்.