பஸ்சில் பயணியிடம் ஜேப்படி; ஆந்திர மாநில பெண் கைது

56பார்த்தது
பஸ்சில் பயணியிடம் ஜேப்படி; ஆந்திர மாநில பெண் கைது
சேலம்: வாழப்பாடியை சேர்ந்தவர் லட்சுமி (47). இவர் சேலம் வந்துவிட்டு, சொந்த ஊருக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் நின்ற பெண், லட்சுமியின் பர்சை ஜேப்படி செய்து அதிலிருந்த ரூ.5 ஆயிரத்தை எடுத்துக்கொண்டார். இதை கவனித்த லட்சுமி சத்தம் போடவே, பயணிகள் அப்பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஆந்திராவின் சித்தூரை சேர்ந்த துர்கா (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி