மதுபான பாட்டில்களுக்கு போலி லேபிள் ஒட்டியவர் கைது

67பார்த்தது
மதுபான பாட்டில்களுக்கு போலி லேபிள் ஒட்டியவர் கைது
நாமக்கல்: போலி மதுபானம் விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்தினர். மது பாட்டில் மீது ஒட்டப்படும் ஹாலோகிராம் லேபிள் அடித்து தரும் நபரை போலீசார் தேடி வந்தனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் (41) என்பவர் இதில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து யார் யாருக்கு போலி லேபிள் அடித்து கொடுத்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி