தீவிர சிகிச்சையில் சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் யெச்சூரி!

70பார்த்தது
தீவிர சிகிச்சையில் சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் யெச்சூரி!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 19ஆம் தேதி சுவாச பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்ததால், யெச்சூரிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி