அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் வெயிலில் நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு முதுமைத் தோற்றம் வரும் என கண்டறியப்பட்டுள்ளது. நமது உடல் இயற்கையாகவே வயதாகிக் கொண்டிருக்கும் பொழுது, மன அழுத்தம், தூக்கமின்மை, வெப்பம் போன்ற காரணங்கள் இந்த செயல்முறையை வேகப்படுத்தும் என்றும், அதிக வெப்பநிலையில் நீண்ட நேரம் இருப்பது உடனடியாக பிரச்சனையை ஏற்படுத்தாவிட்டாலும், மன அழுத்தத்தை அதிகப்படுத்தி வயதாகும் செயல்முறையை வேகப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.