கேரளா: திருச்சூர் கொடுங்கல்லூர் பகுதியில் கடன் வசூல் முகவர்களின் மிரட்டலுக்கு பயந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 3 நிதி நிறுவனங்களின் வசூல் முகவர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டல் விடுத்ததால், ஷினி (34) என்ற இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்டார். அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது பற்றி குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.