ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் பிப்ரவரி 28 முதல் மார்ச் 9ம் தேதி வரை ராணிப்பேட்டை நகராட்சி வார சந்தை மைதானத்தில் 3ஆம் ஆண்டு புத்தக திருவிழா நடைபெறுகிறது. இதில் 60 அரங்குகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெறுகின்றன. பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள், சிந்தனை சொற்பொழிவுகள் நடைபெறுகிறன. அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.