நண்பர்கள் சேர்ந்து, சுற்றுலா செல்ல திட்டம்போட்டாலே அவர்களிடம் இருந்து வரும் முதல் ஊர் கோவா தான். ஆனால், அங்கு கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து பாஜக எம்.எல்.ஏ., மைக்கேல் லாபோ கூறுகையில், “கோவாவிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. கடற்கரைகளில் வடா பாவ் விற்கின்றனர். சிலர் இட்லி, சாம்பார் விற்கின்றனர். இதுபோன்ற நிறைய காரணங்களால் வெளிநாட்டவர்கள் வருவது குறைந்துவிட்டது” என கூறியுள்ளார்.