மதுரையில் வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. மாமன்ற கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடு வளர்க்க ரூ. 500 கட்டணம், குதிரை வளர்க்க ரூ. 750 கட்டணம், ஆடுக்கு ரூ. 50, பன்றிக்கு ரூ. 500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாய் மற்றும் பூனை வளர்க்க ரூ. 750 கட்டணம் செலுத்த வேண்டும். இது செல்லப்பிராணி வளர்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.