“100 நாள் வேலையை தடை செய்க” - அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை

61பார்த்தது
“100 நாள் வேலையை தடை செய்க” - அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை
வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக சேலம், நாமக்கல் உள்பட 9 மாவட்ட விவசாயிகளின் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது, “அறுவடைக் காலம் ஆகியவற்றின்போது, வேலை உறுதித்திட்டத்தில் 100 நாள் வேலை வழங்குவதை தடை செய்ய வேண்டும். அரசு சார்பில் மரவள்ளிக்கிழங்கு அரவை ஆலை அமைக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.

தொடர்புடைய செய்தி