தமிழ் இலக்கியத்தில் பெரும் வாசகர் பரப்பை கொண்டுள்ள எழுத்தாளர்களில் முக்கியமானவர் சுஜாதா. தனது அறிவியல் புனைக்கதைகள் மூலம் நன்கு அறியப்பட்ட இவர் நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் மட்டுமல்லாமல் திரைப்படங்களில் கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் என பல்வேறு தளங்களில் செயல்பட்டுள்ளார். சுஜாதா கடந்த 2008 பிப்ரவரி 27 அன்று காலமான நிலையில் இன்று அவரின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.