கிளியை காகம் போல் கத்தச் சொல்வதா? - வடிவேலு

62பார்த்தது
கிளி அதன் மொழியில்தான் கத்தும், அதை காகம் போன்று கத்தச் சொன்னால் எப்படி? என நடிகர் வடிவேலு இந்தி திணிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் உரையாற்றிய வடிவேலு, "பூனையை குயில் போன்று பாடச் சொன்னால் எப்படி? வேண்டாம். யாரால் எதைக் கற்றுக் கொள்ள முடியுமோ, அதனை கற்றுக் கொள்ளட்டும். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது" என தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக கூறியுள்ளார். 

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி