நாம் தமிழர் கட்சி தொண்டர் சம்மனை கிழிக்கும் முன்பு சீமானின் மனைவி கயல்விழியிடம் அனுமதி கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கறிஞரான கயல்விழி சம்மனை கிழித்தால் என்ன சட்ட விளைவுகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று தெரிந்தும் சம்மனை கிழிக்க அனுமதித்துள்ளாரா என்கிற கேள்வியெழுந்துள்ளது. இந்நிலையில், சீமானின் வீடு அமைந்துள்ள நீலாங்கரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.