முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆலோசனை!

53பார்த்தது
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆலோசனை!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டுறங்கில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்துவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. அப்போது காலை உணவு திட்டம் செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் சத்துணவு திட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேதமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி