மணல் கடத்தல் - ஆம்னி கார் பறிமுதல்!

579பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கவுண்டன்ய ஆற்றுப்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக தொடர்ந்து மணல் கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகர போலீசார் சித்தூர் கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஆம்னி காரை தடுத்து நிறுத்திய போது அதிலிருந்து ஓட்டுநர் காரை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் சோதனை மேற்கொண்டதில் காரில் ஏராளமான மணல் மூட்டைகள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து மணலுடன் ஆம்னி காரை பறிமுதல் செய்தனர் மேலும் அதே போல் ஷேர் ஆட்டோவை அடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதிலும் ஏராளமான மணல் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணலுடன் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி