உடல் நலனும், மன நலனும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. மனநலம் பாதிக்கப்பட்டால் முழு உடலிலும் விரிவான தாக்கம் ஏற்படுகிறது. நாள்பட்ட மனநல பிரச்சனைகள் ஆயுள் காலத்தை குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக மனநலம் தில் பாதிப்பு இருந்தால் இதய ஆரோக்கியம், ரத்த அழுத்தம், தூக்கமின்மை, ஆற்றல் இன்மை, அதிக பதட்டம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். செரிமான மண்டலமும் பாதிக்கப்பட்டு உணவு உட்கொள்வதும் குறையும்.