குடியாத்தத்தில் கஞ்சா விற்ற கேரள வாலிபர் கைது!

68பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தப் பகுதியில் ராகுல் என்பவரிடமிருந்து ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. பின்னர் ராகுலை நீதிமன்ற காவலில் போலீசார் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி