வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (வயது 45). இவர் பேர்ணாம்பட்டு பகுதியில் கம்ப்யூட்டர் நெட் சென்டர் கடை வைத்து நடத்தி வந்தார்.
இதனிடையே பேரணாம்பட்டிலிருந்து ரஞ்சித் குமார் குடியாத்தம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சந்தப்பேட்டை பகுதியில் மதியம் 2 மணியளவில் செங்கல் லோடு ஏற்றிச் சென்ற மினி டிப்பர் லாரி ரஞ்சித்குமார் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ரஞ்சித் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற குடியாத்தம் நகர போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.