குடியாத்தத்தை அடுத்த மேல் ஆலந்தூர் அருகே கூட நகரம் அலங்காநல்லூர் சாலையில் ரயில்வே பாலம் உள்ளது. மழைக்காலங்களில் இந்த பாலத்தின் அடியில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கும் மேலும் பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் இருந்து தொடர்ந்து தண்ணீர் கசிவு கசிந்ததால் எப்பொழுதும் அங்கு தண்ணீர் தேங்கி நிற்கும் இதனால் போக்குவரத்துக்கே இடையூறாக இருப்பதால் தண்ணீர் கசிவை சரி செய்ய தென்னக ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சேர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளனர். இந்த பணிகள் மேற்கொள்வதால் மேல்ஆலந்தூர் ரயில்வே கீழ் பாலத்தின் வழியாக இன்று முதல் நாளை மறுநாள் வரை
போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மூன்று நாட்களும் மாற்று பாதையில் செல்லுமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.