2008-ம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்காக கருப்பு சட்டையுடன் உண்ணாவிரதம் இருந்தார் விஜய். பின்னர் 2009-ம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கத்தை உருவாக்கினார். அந்த ஆண்டு புதுச்சேரியில் விழா ஒன்றில் அரசியலுக்கு வருவதாக பேசி இருந்தார். அதே ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். 2011-ம் ஆண்டு அன்னா ஹசாராவின் ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவு கொடுத்தார். தொடர்ந்து 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவளித்தது.