கே வி குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகில் சுமார் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அந்த தொட்டியில் இருந்து தான் வடுகன்தாங்கல் ஊராட்சியில் உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீரானது மேல்நிலை தேக்க தொட்டியில் இருந்து செல்லும் பைப்புகள் மூலம் வீடுகளுக்கே கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பைப்புகள் காலப்போக்கில் பழுதடைவதும் அதனை ஊராட்சி நிர்வாகம் சரி செய்து மாற்று பைப்பு அமைப்பது என்பது வாடிக்கையான ஒன்று தற்போது சரி செய்யப்பட்ட குடிநீர் பைப்புகள் மீண்டும் பழுதடைந்து அதிலிருந்து குடிநீர் வீணாகி வருகிறது. மேல்நிலை தேக்க தொட்டியில் இருந்து செல்லும் பைப் ஒன்று காட்பாடி-குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலை இணை கடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பைப்பில் தற்பொழுது உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது.
எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் தலையிட்டு குடிநீரை வீணாக்காமல் பழுப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.