அதிக கிளைசீமிக் குறியீடு கொண்ட பழங்களில் வாழைப்பழங்கள் முதலிடம் பெறுகிறது. எனவே இரவு நீண்ட நேரம் உண்ணாமல் இருந்துவிட்டு காலை எழுந்த உடனேயே வெறும் வயிற்றில் வாழைப்பழங்களை சாப்பிடுவதால் உங்களின் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கிறது. மேலும் இது கார்போஹைட்ரேட்டின் மூலமாக இருப்பதால் உடல் எடையையும் அதிகரிக்கும். எனவே வாழைப்பழத்தை மதியம் 12 மணி முதல் 5 மணி வரை சாப்பிடலாம். மாலை அல்லது இரவில் தாமதமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.