ட்ராவல் லோன் என்பது பர்சனல் லோனின் மற்றொரு வடிவமாகும். குறுகிய வட்டி விகிதங்களுடன் இது வழங்கப்படுகிறது. மாத சம்பளம் பெறக்கூடிய நபர்கள், சுயதொழில் செய்யும் நபர்களுக்கு வருமான அளவுகளின் அடிப்படையில் இந்த லோன் வழங்கப்படுகிறது. 21 முதல் 60 வயது வரையிலான நபர்கள் இந்த லோனுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது சுயதொழில் செய்யும் நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு அருகில் உள்ள வங்கிக் கிளையை அணுகுங்கள்.