“சினிமா பிரபலங்கள் தொடர்புடைய விஷயங்களின் மீது அரசு அதிகாரிகளும், ஊடகங்களும் காட்டும் ஆர்வத்தை சாதாரண மக்களின் மீதும் காட்ட வேண்டும் என நான் விரும்புகிறேன். அது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம். அதிலிருந்து நாம் பாடத்தை கற்றுக் கொண்டு, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாம் அனைவரும் தவறு செய்பவர்கள்தான். ஒரு மனிதர் மட்டும் இதற்கெல்லாம் பொறுப்பாக முடியாது!" என அல்லு அர்ஜுன் கைது குறித்து நடிகர் நானி பதிவிட்டுள்ளார்.