'புஷ்பா 2' படம் வெளியான திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (டிச.13) தெலங்கானா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.