பறவைகள் வான் வெளியில் நீண்ட நேரம் பறக்கும் திறன் படைத்தவை. சில பறவைகள் ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக பறந்து கண்டம் விட்டு கண்டம் செல்லும் அசாத்திய திறமை படைத்தவை. ஆனால் எவ்வளவு நேரம் பறந்தாலும் அவை வான் வெளியை வசிப்பிடமாக கருதாது. ஒருகுறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வசிப்பிடத்திற்கு திரும்பிவிடும். ஆனால் ’அபஸ் அபஸ்’ என்னும் பறவை 10 மாதங்களுக்கும் மேலாக வான்வெளியிலேயே வாழும் இயல்புடையது. பறந்தபடியே தூங்கும்.