நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு: சமரசம் செய்த அதிமுக நிர்வாகி

55பார்த்தது
வேலூர் முள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (21). ஷூ கம்பெனியில் வேலை செய்து வரும் இவர் தண்டல கிருஷ்ணாபுரம் பாலாற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக யுவராஜ் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். பின்னர் உடன் இருந்த நண்பர்கள் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் யுவராஜியின் உடலை மீட்டனர். பின்னர் அங்கு வந்த மக்கள் பாலாற்றில் சட்டவிரோதமாக மணல் எடுத்ததால் ஏற்பட்ட பள்ளத்தினால் தான் யுவராஜ் உயிரிழந்ததாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு ஆகியோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் சட்டவிரோதமாக இரவு நேரத்தில் நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என்றும், போலீசாரிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

பின்னர் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு வேலூர் எஸ்.பி., மற்றும் ஆட்சியரிடம் தொலைபேசிமூலம் இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து தெரியப்படுத்தினார். அதற்கு எஸ்.பி., உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு பொதுமக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி