காட்பாடியில் 250 கிராம் கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

84பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அடிக்கடி ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கிக்கொண்டு வந்து காட்பாடியில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக அந்த தகவலின் அடிப்படையில் காட்பாடி உள்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில் காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் தமிழ்செல்வன் தலைமையில் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவல் துறையினர் தனியார் பல்கலைக்கழக 3-வது கேட் எதிரில் வாகன தணிகை செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த நபரை அழைத்து விசாரணை செய்தபோது காட்பாடி பெரியபுதூர் காலனி சேர்ந்த கதிர்வேலு மகன் பூவேந்தன் (எ) அப்பு (வயது-24) என்பதும் அவர் ஆந்திராவில் இருந்து காட்பாடிக்கு விற்பனை செய்ததாக 250 கிராம் கஞ்சா வாங்கி வந்தது தெரிய வந்தது உடனே அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி