காட்பாடி அடுத்த செங்குட்டை எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி அவர்கள் காட்பாடி அடுத்த செங்குட்டை பகுதியில் உள்ள எம். ஜி. நகரில் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடையில் ஆய்வு செய்தார் அப்போது நியாய விலை கடை விற்பனையாளரிடம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமை மற்றும் பருப்பு போன்ற பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், 1 வது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாமன்ற உறுப்பினர் அன்பு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.