*ரூபாய் 3. 60 கோடி மதிப்பீல் புதிதாக கட்டப்பட்ட காட்பாடி ஊராட்சி ஒன்றிய கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார்*
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கல்புதூர் பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ3. 60 கோடியில் புதியதாக கட்டப்பட்ட புதிய கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் திறந்து வைத்ததை தொடர்ந்து வேலூர் மாவட்ட கோட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் காட்பாடி ஒன்றிய குழுத் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் குத்துவிளக்கு ஏற்றி கட்டத்தை பார்வையிட்டனர்.