காட்பாடியில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டம்

81பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,
பத்தாண்டு காலம் நாம் வனவாசத்தில் இருந்தோம். யாரும் பஞ்சாயத்து போர்டில் கிடையாது, தலைவர் கிடையாது, எதிலும் கிடையாது ஆனால் இன்றைக்கு ஆட்சிக்கு வந்து ஒவ்வொரு பொறுப்பிலும் உள்ளம் ஊருக்கு ஊரு தலைவர், கவுன்சிலர் இது நாம் ஆட்சிக்கு வந்ததால் தான் சாத்தியம்.
ஆனால் இப்போது நமக்குள் என்ன சண்டை டெண்டரை நான் எடுப்பதா நீ எடுப்பதா என்றா? இல்லை என் பெயரில் எடுப்பதா உன் பேரில் எடுப்பது என்பது தானே சண்டை.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்த தொகுதியில் உள்ளேன் ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரியும். இது போன்ற சண்டைகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும். 10 ஆண்டுக்குப் பிறகுதான் நாம் கலெக்டர் ஆபீஸ், யூனியன் ஆபீசை எட்டிப் பார்க்கிறோம் இன்னும் நாம் புல் ஆகவில்லை.
வரும் நாடாளுமன்றத் தேர்தல், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கு அளவுகோலாக அமையும். போன முறை ஒன்றை விட்டு விட்டோம் இந்த முறை 39தையும் நாம் வெற்றி பெற்று காட்ட வேண்டும் பாண்டிச்சேரியை அடித்து சொல்கிறேன் அதில் திமுக தான் உறுதியாக வெற்றி பெறும். ஆக நாற்பதிலும் திமுக வெற்றி என்று சொன்னால் அடுத்த முறை கூட்டணிகள் சிதறிப்போகும் அதிகமானோர் நம்மிடம் வர காத்துக் கிடப்பார்கள் என பேசினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you