புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சட்ட அமைச்சர் தலைமையிலான தேடுதல் குழு பரிந்துரைத்த 5 பேர் பட்டியலில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்படுவார். தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இன்று ஓய்வு பெறுவதால், புதிய ஆணையர் அறிவிப்பு இன்று (பிப்.17) இரவு அல்லது நாளை வெளியாக வாய்ப்பு உள்ளது.