திருநெல்வேலியில் பொறியியல் மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு விசாரணை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தள பக்கத்தில், "இசிஆர் வழக்கில் டோல் கேட்டில் விலக்கு பெற திமுக கொடி கட்டிய குற்றவாளி. இப்போது எறும்பு கடித்து இவ்வளவு ரத்தம் சிந்தி, மர்மமாக உயிரிழந்த மாணவன் என இவர்கள் விசாரணை எல்லாம் சினிமாவில் வைத்தால் கூட யாரும் நம்ப முடியாத அளவில் தான் இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.