அரசியல் கட்சியில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் கிடையாது. அமைதியாக அவரவர் தங்களது வேலையை பார்த்தால் நல்லது என திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பீர்களா? இருவருக்கும் சுமூக உறவு உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'கேள்வி மேல் கேள்வி கேட்காதீர்கள், கோயிலுக்கு செல்வதால் தயவு செய்து விடுங்கள்' என பதிலளித்துவிட்டு சென்றார்.