உ.பி: பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இளைஞர் ஒருவர் செல்போனை நீராட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இந்த போன் பாவம் செய்துள்ளது, அதை கழுவ வேண்டும் என்று கூறி போனை அந்த இளைஞர் புனித நீரில் நீராட வைத்துள்ளார். இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் அந்த செல்போனின் பாவம் கழுவப்பட்டது என்றும் இது மூடத்தனம் என்றும் கலவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.