காட்பாடி ரயில் நிலையத்துக்கு யூரியா, காம்ப்ளக்ஸ் உரம் வருகை

55பார்த்தது
மங்களூரிலிருந்து 567 டன் யூரியா மற்றும் 373 டன் காம்ப்ளக்ஸ் நேற்று ரயிலில் காட்பாடிக்கு கொண்டுவரப்பட்டது. இந்த உர மூட்டைகள் லாரிகள் மூலம் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறுகையில் காட்பாடி இந்நிலையத்துக்கு மொத்தம் 940 டன் யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் ரயிலில் வந்துள்ளது. இவை அனைத்தும் தனியார் உரக்கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் 78 டன் யூரியா 6 டன் காம்ப்ளக்ஸ், திருவண்ணாமலை 87 டன் யூரியா 48 டன் காம்ப்ளக்ஸ், திருப்பத்தூர் 75 டன் யூரியா 25 டன் காம்ப்ளக்ஸ், ராணிப்பேட்டை 176 டன் யூரியா 37 டன் காம்ப்ளக்ஸ், காஞ்சிபுரம் 50 டன் யூரியா 5 டன் காம்ப்ளக்ஸ், கள்ளக்குறிச்சி 44 டன் யூரியா 15 டன் காம்ப்ளக்ஸ், செங்கல்பட்டு 57 டன் யூரியா 24 டன் காம்ப்ளக்ஸ், வேலூரில் தனியார் நிறுவன கிடந்தது 213 டன் காம்ப்ளக்ஸ் என மொத்தம் 940 டன் உரங்கள் லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி