விமர்சையாக நடைபெற்ற அர்ஜுனன் துரியோதனன் படுகளம்

56பார்த்தது
வேலூர் மாவட்டம்

*காட்பாடி அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற அர்ஜுனன் துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா*

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை கோட்டநத்தம் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா கடந்த மாதம் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது கடந்த 3-ம் தேதி மகாபாரத கொடியேற்றமும் தொடர்ந்து பாரத கொடியேற்றமும் நடைபெற்றது.

அன்று முதல் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் நீவா நதிக்கரை பொன்னை ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு திரௌபதி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு பிற்பகல் இரண்டு மணி முதல் 5 மணி வரை பாரத சொற்பொழிவு நடைபெற்றது இரவு வேளையில் மகாபாரத தெருக்கூத்து நாடகம் நடைபெற்று வந்தது.

அதனை தொடர்ந்து கடந்த 12-ஆம் தேதி திரௌபதி அம்மன் திருக்கல்யாண வைபவம் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இன்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்தனர் அப்பொழுது பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க அரோகரா கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பினர்

இந்நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி