தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து நாளை (அக்., 18) சேலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. மாநாட்டு குழுக்கள், தற்காலிகத் தொகுதி பொறுப்பாளர்களுக்கு சேலம் ஆத்தூர் அருகே அம்மாபாளையத்தில் பயிலரங்கம், கலந்தாய்வு நடக்கிறது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், தமிழகத்தில் இதுவரை நடந்த பிற கட்சி மாநாடுகள், மாநாட்டு ஏற்பாடு உள்ளிட்டவை குறித்து பயிலரங்கம் நடக்கிறது.