நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராம மக்கள் எதிர்ப்பு.

56பார்த்தது
ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலையில் உள்ள 14வது கொண்டை ஊசி வளைவு அருகே முத்தானூர் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் 35 க்கும் மேற்பட்ட
குடும்பங்கள் பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். அந்த கிராமம் தனியார் பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கிராமம் கடந்த பல ஆண்டுகளாக நீதிமன்ற வழக்கில் இருந்தது. இந்த நிலையில் அந்த இடத்தை அளவீடு செய்ய நீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி முத்தானூர் கிராமத்தை அளக்க வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் திருப்பத்தூர் டிஎஸ்பி, தலைமையில்
நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சென்றனர். அப்போது நிலத்தை அளக்க
முயன்ற போது அங்கு ஒட்டு மொத்த கிராம மக்கள் ஒன்று திரண்டு அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வீடு கட்டி வசித்து வருகிறோம் இங்கிருந்து நாங்கள் சென்றுவிட்டால் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்து எதிர்ப்பு தெரிவித்து
நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்யாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

அங்கு பதற்றமாக சூழல் நிலவியதால்
நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட குவிந்ததால் ஏலகிரி மலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி