பட்டப்பகலில் தொடர் மண் கொள்ளை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

74பார்த்தது
பட்டப்பகலில் தொடர் மண் கொள்ளை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் பதவி ஏற்ற நாள் முதல் அரசுக்கு சொந்தமான இடங்களில் அதிக அளவில் மண் கொள்ளை என சமூக ஆர்வலர்கள் கடும் குற்றச்சாட்டு.

நாட்றம்பள்ளி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகளில் விவசாயிகளுக்கு நிலம் சமன் படுத்த அரசு அதிகாரிகள் அனுமதி பெற்று ஏரிகளில் ட்ராக்டர் மூலம் விவசாயிகள் மண் எடுத்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார் என கூறப்படுகிறது. மண் கொள்ளையர்கள் அரசுக்கு சொந்தமான இடங்களில் இந்த உத்தரவு வருவதற்கு முன்பு இரவு நேரங்களில் மண் கொள்ளை அடித்து வந்த நிலையில் தற்போது பட்டபகலிலே அரசுக்கு சொந்தமான ஏரிகளில் பெயருக்காக 5 ட்ராக்டர்களை வைத்து கொண்டு 10க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் அமோகமாக மண் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினால் வருவாய் துறையினரிடம் அனுமதி பெற்றாக கூறி வருகின்றனர். எனவே வருவாய் துறையினர் விவசாய நிலங்கள் சமன்படுத்த ஏரிகளில் மண் எடுக்க அனுமதி அளித்தார்களா அல்லது வீட்டுமனை மற்றும் செங்கல் சூளைக்கு மண் எடுக்க அனுமதி அளித்துள்ளார்களா‌ என பொதுமக்களுக்கு விளக்கம் தெரிவிக்கும் படி மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி