வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் பெறப்பட்டுள்ள மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் பொதுத்துறை சிறப்பு செயலாளர் (ம) முன்னாள் படைவீரர்கள் நலத்துறை இயக்குநர் சஜ்ஜன் சிங் ஆர். சவான், மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி அவர்களுடன் இன்று (மார்ச் 14) ஆலோசனை நடத்தினார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.